Thursday, July 5, 2012

கீதா மாதா

                                                
                      வேதத்தின் சாராம்சத்தை தன்னுள் கொண்டது பகவத்கீதை. இந்நூலில் 18 அத்யாயங்கள், 729 ஸ்லோகங்கள் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று தத்துவ ஞானிகளாலும் உரை எழுதப்பட்ட பெருமை கொண்டது. வேதத்தை வேதமாதா என்று போற்றுவது போல, கீதையை கீதா மாதா என்பர். காந்திஜி பகவத்கீதை தான் என் தாய் என்று அடிக்கடி புகழ்வது வழக்கம். குரு÷க்ஷத்திர போர் நடந்தபோது, எதிரே தனது உறவினர்கள் இருந்தது கண்டு கலங்கிய அர்ஜுனன் அவர்களைக் கொல்ல மனமில்லாமல், தனது வில்லை கீழே போட்டுவிட்டு தயங்கி நின்றான். அவனுடைய தயக்கத்தை போக்கி, கடமையைச் செய்வதிலும், தர்மத்தைக் காப்பதிலும் தான் ஆனந்தம் என்ற உண்மையை கிருஷ்ணர் உபதேசித்தார். மேலும், எல்லா உயிரும் என்றேனும் ஒருநாள் மரணமடையக்கூடியதே என்ற உண்மையைப் போதித்தார். அதுவே பகவத்கீதையாக மலர்ந்தது. யுத்தம் நடந்த குரு÷க்ஷத்திரத்தில் கீதாமந்திர் என்னும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.